2014-2015 ஆம் கல்வியாண்டின் ஆண்டுவிழா 21.03.2015 அன்று மாலை 5மணிக்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு. தொழில்துறை அமைச்சர் பி. தங்கமணி அவர்கள் கலந்து கொண்டார். மேலும் நகர்மன்றத் தலைவர் திருமதி. பொன். சரஸ்வதி மற்றும் கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், புரவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.