சுற்றுச்சூழல் களப்பயணம்-2014

28.06.2014 அன்று சுற்றுச்சூழல் களப் பயணமாக திருச்செங்கோடு மலைக்குச் சென்றோம். சுற்றுச் சூழல் மன்றத்தைச் சார்ந்த 40 மாணவர்களும், அறிவியல் ஆசிரியர் திருமதி. சித்ரா பொறுப்பேற்று வழிநடத்தினார். முன்னதாக அறநிலையத்துறை மற்றும் கல்வி அதிகாரிகளிடம் சம்மதம் பெற்று காலை 10 மணியளவில் திரும்லையை அடைந்தோம். மாணவர்கள் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடந்த நெகிழிப் பைகள், பாட்டில்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனர். தோட்டப்பகுதிகளை ஒழுங்குபடுத்தினர். அன்னதான திட்டத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் மாலை 3.30மணிக்கு பாதுகாப்பாக பள்ளி வந்தடைந்தனர்.