நமது தேசத்தின் 68 வது சுதந்திர தின விழா இன்று(15.08.2014) காலை 9 மணிக்கு கோலாகலமாக நம் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் திருச்செங்கோடு நகராட்சி தலைவர் திருமதி. பொன். சரஸ்வ்தி அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றினார். விழாவில் நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் கழக உறுப்பினர்கள் க்லந்து கொண்டனர்.
நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு இமைகள் நிறுவனத்தார் மற்றும் திரு. முத்து முருகானந்தம் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். மாணவர்களுக்கு விழா இறுதியில் இனிப்போடு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
