நாணயக் கண்காட்சி


கிராம கல்விக் குழு உறுப்பினர் திரு. கோல்டன் சரவனன் அவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் நாணயங்கள் மற்றும் புராதனப் பொருட்கள் கண்காட்சி இவ்வாண்டு திருச்செங்கோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. நம் பள்ளியைச் சேர்ந்த 6-8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 13.08.2014 அன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் மாணவர்கள் கண்காட்சியைக் கண்டு பயனுற்றனர். புராதனப் பொருட்களைச் சேமிக்கும், மதிக்கும் பழக்கத்தினை கற்றுணர்ந்தனர்.