இவ்வருட ஆண்டுவிழா 04.03.2016 அன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக நகரமன்றத் தலைவர் திருமதி. பொன். சரஸ்வதி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகங்கள், கண்கவர் கலைநிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றன. விழாவில் பாரம்பரிய கலைகளான சிலம்பம் சுற்றுதல், தற்காப்புப் பயிற்சியான கராத்தே ஆகியவற்றை மாணவர்கள் அரங்கேற்றினர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தனித்திறன் கண்டு பாராட்டினர்.
விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. செந்தமிழ்ச்செல்வி, ஆசிரியப் பயிற்றுநர் திரு. விஜயகுமார் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழா மேடையில் புரவலர் பலர் இணைந்தனர். விழா சிறப்பாக நிறைவுற்றது.