கல்விச் சுற்றுலா-26.08.2017

இப்பள்ளியைச் சேர்ந்த 45 மாணவர்களும், 15 ஆசிரியர்களும் 26.08.2017 அன்று ஒரு நாள் கல்விச் சுற்றுலாவாக பாண்டிச்சேரி சென்றிருந்தோம்.

அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில், புதுச்சேரி சட்டப்பேரவை, கவர்னர் மாளிகை, மணக்குள விநாயகர் கோவில், கடற்கரை ஆகியனவற்றை மாணவர்கள் ரசித்தனர்.

கடற்கரை அலையில் மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். நள்ளிரவு அனைவரும் பள்ளி திரும்பினோம். மாணவர்கள் அவர்தம் பெற்றோருடன் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.