திருச்செங்கோடு ஒன்றியம், நெசவாளர் காலனி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (31.08.2017) காலை 10.30 மணியளவில் 'மின்சார சிக்கனம்' விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
நெசவாளர் காலனி மின்வாரியத்தைச் சார்ந்த இளநிலை மின்பொறியாளர், சட்டையம்புதூர் மின்வாரிய உதவி இயக்குநர் மற்றும் முக்கிய மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் மின்சார சிக்கனம் செய்யும் வழிமுறைகள் ஆகியவற்றை அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மின் விடுமுறை அளிப்பது ஏன்? மின் பற்றாக்குறை ஏற்பட காரணம் என்ன போன்ற சுவாரஸ்யமான வினாக்களை மாணவர்களும் கேட்டறிந்தனர்.
நண்பகல் 11.30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவுற்றது