நெசவாளர் காலனி பள்ளியில் இன்று (05.09.2017) திருச்செங்கோடு ஸ்டேட் பாங்க் உதவியுடன் வகுப்பு தோறும் ஒலிபெருக்கி(Speaker) நிறுவப்பட்டுள்ளன.
இந்த ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி தொடர இருப்பன:
* வானொலி செய்திகளை ஒலிபரப்புதல்
* மாணவர்கள் தனித்திறமை வளர்க்க வாய்ப்பளித்தல்
* குழந்தை நேயப் பாடல்கள், விழிப்புணர்வுப் பாடல்கள் ஓரிடத்திலிருந்து பாடுதல்
* அனைத்து மாணவர்களுக்கான அறிவிப்புகளை ஓரிடத்திலிருந்து அறிவித்தல்
* மழைக் காலங்களில் உள்ளரங்க இறைவணக்க கூட்டம் நடத்துதல்
ஏறத்தாழ ரூ 13,000 நன்கொடையளித்து உதவிய பாரத ஸ்டேட் பாங்க், திருச்செங்கோடு கிளைக்கு மனமார்ந்த நன்றிகள்!😊🙏