தேசிய வாக்காளர் தினம்-25.01.2018

இன்று (25.01.2018) காலை 11 மணியளவில் இப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.  தலைமையாசிரியர் ராஜா அனைவரையும் வரவேற்றார். 


புதிய வாக்காளர் சேர்ப்பு, முகவரி திருத்தம் மற்றும் நீக்கல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. “நேர்மையாக வாக்களிப்போம்” என்னும் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். இந்நிகழ்வில் வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்குச் சாவடி மைய அலுவலர்களும் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.