இன்று(04.07.2015) நம் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவைச் சார்ந்த 40 மாணவர்கள் சங்ககிரி மலைக் கோட்டைக்கு ஒரு நாள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பள்ளி வாசலிலேயே நகரப்பேருந்தில் ஏறி சங்ககிரி சென்றிருந்தோம். சங்ககிரி மலைக் கோட்டையின் வரலாறு, தீரன் சின்னமலையின் வாழ்க்கை, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் மற்றும் அதன் பணிகள் ஆகியன பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இப்புராதன சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மாணவர்கள், கோட்டைக்குட்பட்ட பகுதிகளில் பாலிதீன் பைகள், குப்பைகளை அகற்றி சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்
களப்பயணத்தின் போது மாணவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் குளிர்பானம் ஆகியன வழங்கப்பட்டன. பேருந்துக் கட்டணம் உட்பட அனைத்து செலவுகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு நிதியிலிருந்து பயன்படுத்தப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பார்த்த பரவசத்தை மாணவர்கள் முகத்தில் காண முடிந்தது.