2017-2018 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர்களின் வீடு வீடாக மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டதால் விடுமுறையிலேயே ஏராளமான மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். சென்ற ஆண்டைக் காட்டிலும் மாணவர் சேர்க்கை இரட்டிப்பாகியுள்ளது. அரசின் உத்தரவையொட்டி 07.06.2017 அன்று பள்ளி திறக்கப்பட்டது.
பள்ளியில் முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளும், பிற வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புகுமுக அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. மாதவன் அவர்களும், பெற்றோர்களும் மற்றும் புதுவகுப்பு குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய திரு. மாதவன் அவர்கள் புதுமுக வகுப்பு குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தையும், படிக்க வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துக் கூறி அக்குழந்தைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். விழாவின் தொடர்ச்சியாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், விலையில்லா பாடக் குறிப்பேடுகள், விலையில்லா சீருடைகள் வழங்கும் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.

