2017-2018 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை கோடை விடுமுறையிலேயே தொடங்கிவிட்டோம். பள்ளியின் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய 1000 துண்டுப் பிரசுரங்களை அச்சடித்திருந்தோம்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வில் ஈடுபட்டனர். இவ்வாண்டு பள்ளிக் கணக்கெடுப்பு அல்லாத பகுதிகளான கோம்பை நகர், வேல்முருகன் நகர் மற்றும் பக்தவச்சலம் நகர் ஆகிய பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆசிரியர்கள் திருமதி. சங்கீதா, திருமதி. சத்யப்ரியா, திருமதி. ச. கோமதி, திரு. பார்த்திபன், திரு. செல்வராஜூ, திரு. ரமேஷ் மற்றும் திருமதி. உ. கோமதி ஆகியோர்க்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும்!
