2இன்று(15.06.2017) மதியம் 2.30 மணியளவில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் உள்ள ஆலமரத்தடியில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. லோகநாதன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி. கமலம் மற்றும் 250க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பெற்றோர்களின் வருகைக்காக நெசவாளர்காலனி ஊர்நலக் கமிட்டியிடம் கோரி 200 பிளாஸ்டிக் சேர்கள் வாடகைக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பள்ளியின் சார்பாக அனைவருக்கும் சுக்கு காபி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணி முதலே பெற்றோர்கள் சாரை சாரையாக வரத் தொடங்கினர். கூட்டத்தில் கீழ்க்காணும் கருத்துகள் கலந்தோலிசிக்கப்பட்டன.
கருத்து-1:
பெரும்பான்மையான பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கு டைரி, கணினிப் புத்தகம், அடையாள அட்டை மற்றும் வேன் வசதி ஆகியன வழங்கலாம் என முடிவாற்றப்பட்டது.
கருத்து-2
மாணவர் எண்ணிக்கை உயர்ந்ததை முன்னிட்டு நகராட்சியிடம் கோரி 2 வகுப்பறைகள் கட்ட துரித நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.
கருத்து-3:
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்க கல்வித் துறையை நாடலாம் என கலந்தாலோசிக்கப்பட்டது.
கருத்து-4:
இவ்வாண்டில் அதிக மாணவ-மாணவியர்களைச் சேர்க்கை செய்ய உழைத்திட்ட அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களில் தங்களது குழந்தைகளை இதே பள்ளியில் சேர்த்திட்ட திரு. மனோஜ் மற்றும் ஆசிரியை திருமதி. அகிலா ஆகியோர்க்கு சிறப்புப் பாராட்டு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை ஆசிரியர் திரு. மனோஜ் அவர்கள் நெறிப்படுத்தினார். ஆசிரியர் திரு. பார்த்திபன் அவர்கள் ஒளி&ஒலிப்பதிவு செய்தார்.