சுதந்திர தின விழா-2015


15.08.2015 அன்று நம் தேசத்தின் 69வது சுதந்திர தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் நகரமன்றத் தலைவர் திருமதி. பொன். சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டி கொடியேற்றினார். கிராம கல்விக் குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

சுதந்திர தின விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும் நாட்டுப் பற்றை வளர்க்கும் வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு திரு. முத்துமுருகானந்தம், இமைகள் நிறுவனத்தார் மற்றும் திரு. கே. ஏ. காசிவிஸ்வநாத முதலியார் குடும்பத்தினர் பல்வேறு பரிசுகள் வழங்கி உதவினர்.