2015-16 ஆம் கல்வியாண்டில் தமிழக அரசால் பெண்குழந்தைகளுக்க்கு தற்காப்புக் கலையான ‘கராத்தே’ பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருச்செங்கோடு ஒன்றியத்தில் இரண்டு பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டன. அதில் நம் பள்ளியும் ஒன்று.
இத்திட்டத்திற்காக 6-8 வகுப்பில் பயிலும் 50 பெண் குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் தெரிவு செய்யப்பட்டனர். வட்டார வள மைய அலுவலரால் கராத்தே பயிற்சியளிக்க செல்வி. நந்தினி என்னும் பெண் ஆசிரியை நியமிக்கப்பட்டார். மாதம்தோறும் ரூ 2000 ஊதியத்தில் 5 மாதத்திற்கு ஊதியம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 2015 இல் தொடங்கி டிசம்பர் 2015 வரை வாரம் 3 நாட்களுக்கு பள்ளி முடிந்த பின்பு இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
