13.09.2015 அன்று முக்கொம்பு, கல்லணை, தஞ்சை பெரிய கோவில் ஆகிய இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா சென்றிருந்தோம்
6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர் 45 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். உடன் அனைத்து ஆசிரியர்களும் சென்றிருந்தனர்.
காலை 8 மணிக்கு முக்கொம்பை அடைந்தோம். மதிய இடைவேளையில் கல்லணை பார்த்துவிட்டு மாலை 5 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலை அடைந்தோம். இரவு 11 மணிக்கு பள்ளியை அடைந்தோம். மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பூங்கா ஆகியவற்றைக் கண்டு மாணவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.