இவ்வருட ஆண்டுவிழா 03.03.2017 அன்று மிகவிமரிசையாக கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. பொன். சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார். வட்டார வள மைய அலுவலர் மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ12 லட்சம் ரூபாயை இரண்டு வகுப்பறைகள் கட்ட ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளார். சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ-மாணவியர்க்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.