கோழிக்கால்நத்தம் குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நம் பள்ளியில் நடைபெற்றது. 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
நம் பள்ளி மாணவரக்ள் ராக்கெட் மாதிரி மற்றும் சுற்றுச்சூழல் மாதிரி ஆகியவற்றை தயார் செய்திருந்தனர். ராக்கெட் செயல்பட்ட விதம் காண்போரை வியக்கச் செய்தது. முதல் பரிசை நம் பள்ளி பெற்றுள்ளது.
இதே போன்று பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியிலும் நம் மாணவர்கள் முதல் பரிசை வென்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த பங்கேற்புக்கான விருதையும் பள்ளிக்குப் பெற்றுத் தந்துள்ளனர்.
