* கணினி முகாம், சேர்க்கை முகாம் நடத்தி மாணவர் எண்ணிக்கையை எதிர்பார்பிற்கேற்ப 350ஐ நெருங்கியிருக்கிறோம்
* ஓர் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கி, ஆசிரியரை நியமித்திருக்கிறோம்
* பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு அதிகாரமளித்து வங்கிக் கணக்கு தொடக்கம்
* விளையாட்டு மைதானம் சமன்படுத்தப்பட்டுள்ளது
* இன்னர்வீல் மூலம் எரியூட்டி, உடற்கல்வி அறை திறப்பு, சமையலறை வண்ணப் பூச்சு ஆகியன நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளன
* பராமரிப்பு மான்யம் மூலம் அனைத்து வகுப்பறை கதவு, ஜன்னல்கள் தாழ்ப்பாள்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் கெரசின் எண்ணெய் மராமரத்துப் பணியும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது
* கழிவறைக் கதவுகளை நிலை உயர்த்தப்பட்டுள்ளன.
* ரோட்டரி மூலம் பள்ளியின் பெயர்ப்பலகை எழுதியது, பெல்,அலமாரி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளன.
* KAK குடும்பம் மூலம் 12 மாணவர் எழுதும்.மேசை நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளன
* பதிவுத்தாளில் QR Sticker ஓட்டி அதன் மூலம் மாணவர் விபரங்களை அறியும் முறை அறிமுகம்
*குழந்தை நேயப்பள்ளியாக இணைந்து செயல்பட்டது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்பாகச் செயலாற்றி வருகிறோம்
* பள்ளி மான்யம் மூலம் ஆட்டோமேடிக் பெல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது
* கணினி அறை, த.ஆ அறையில் எலக்ட்ரிக் ஷாக் தவிர்க்க MCB சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன
*தொடர் தொந்தரவு தந்த சிறுவர்களை எச்சரித்து பள்ளி வளாகம் அமைதி பேணியிருக்கிறோம்
* அமராவதி, திருமூர்த்தி அணை, ஆழியார் தவ மையம் ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றது
* 4 மரக்கன்றுகள் புதியதாக இவ்வாண்டில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது
* கூர்க்-ஆசிரியர்கள் குடும்ப சுற்றுலாவாகச் சென்றிருக்கிறோம்
* பிரம்மாண்டமான ஆண்டுவிழா -கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்டது
* ஆண்டுவிழா மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் 2 புதிய வகுப்பறை கட்ட உறுதி பெற்றிருக்கிறோம்
*டைனிங் அறை மின்விசிறிகள் பழுதுபார்ப்பு செய்யப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன
* தலைமையாசியர் அறைக்கு புதிய ரோலிங் சேர் வாங்கப்பட்டுள்ளது
* மாடர்ன் லைப்ரரி அலமாரி வாங்கப்பட்டுள்ளது
* இந்தக் கல்வியாண்டு முதல் சுட்டி விகடன் மாணவர் இதழுக்கான ஆண்டு சந்தா செலுத்தப்பட்டு புத்தகங்கள் வர ஆரம்பித்துள்ளன.
* நாள்தோறும் நூலகத்திற்கு செய்தித்தாள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
* மாணவர் குழு புகைப்படத்தினை பெரியதாகவும், மாணவர் பெயருடனும் வழங்கப்பட்டுள்ளன
* பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் அறிமுகம்-இசை மற்றும் நடன அசைவுகளுடன் வாழ்த்துப்பாடல்
* இந்தக் கல்வியாண்டு முதல் சாலையைக் கடக்க ஆசிரியர்களின் தன்னார்வ பங்களிப்பு நடைமுறைக்கு வந்தது
* இரண்டு நிலைகளிலும் அறிவியல் கண்காட்சி பரிசு மற்றும் சிறந்த பங்கேற்புக்கான விருது
* Optical Fibre இணைய வசதி வாங்கியது, த.ஆ அறையை இணைய வசதி உடையதாக மாற்றப்பட்டுள்ளது
* கணினிகளுக்குப் பெயர் சூட்டி WiFi வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுள்ளன
*வட்டார அளவில் பேச்சுப் போட்டியில் மாணவன் வென்றிருக்கிறார்
* SMC கணக்கினை தொடங்கிய நாள் முதல் நாளது தேதி வரை ஆன்லைன் ஸ்டேட்மெண்ட் பதிவிறக்கம் செய்து வரவு-செலவு சரிபார்த்தது
*சுதந்திர தினவிழா, ஆண்டுவிழா, குடியரசுதின விழா, விளையாட்டு விழா ஆகியன சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன
* இராஜ்ய புரஸ்கார் - சாரண பயிற்சி முகாமில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்திருக்கிறோம்
* இவ்வாண்டில் கூடுதலாக 5 WiFi dongle வாங்கப்பட்டுள்ளன
* எல்லா வகுப்பறைகளுக்கும் சுவர்க் கடிகாரம் வழங்கப்பட்டுள்ளன
* ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ‘மாணவர் கையேடு’ வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது
* மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையான, மேம்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன
* அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பேருந்து பயண சீட்டு, ஜாதிச் சான்று பெற்றுத்தரப்பட்டுள்ளன
* குறுவள மையமாக பள்ளி செயல்பட ஒத்துழைப்பு தந்திருக்கிறோம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி மற்றும் குறுவள மைய அளவிலான கண்காட்சி ஆகியன இப்பள்ளி வளாகத்தில் நடைபெற சிறந்த ஒத்துழைப்பு தரப்பட்டது
*ஏறத்தாழ 100 மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கியிருக்கிறோம்
*அனைத்து மாணவர்க்கும் ஆதார் எண் பெற்று ஆன்லைன் ஆதார் பேணும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
* எல்லா மாணவர்களுக்கும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது
* ஆசிரியர்களுக்குப் பணியைப் பிரித்து வழங்கி Job Chart தயாரித்து சிறப்பாக பணியாற்றி வருகிறோம்
* நடன ஆசிரியரின் பங்களிப்பைக் குறைத்து, பள்ளி ஆசிரியர்களே நடனம் கற்றுக் கொடுத்து பள்ளியின் செலவினைக் குறைத்துப் பங்காற்றியுள்ளனர்
* Phonetic சுவர்ச் சித்திரம் மூன்றாம் வகுப்பில் வரையப்பட்டுள்ளது
* தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் பள்ளி ஆய்வினை எதிர்கொண்டிருக்கிறோம்
* பள்ளி ஆண்டாய்வு செய்ய ஒத்துழைப்பு அளித்தது
*ECO குப்பைத் தொட்டி மேலாண்மை மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை
* இரண்டு ஆசிரியைகள் மகப்பேறு விடுப்பில் இருந்த போதிலும், பதிலி ஆசிரியர் மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தோம்
2016-2017 ஆம் கல்வியாண்டில் தவறவிட்டவை:
*கணித, இலக்கிய மற்றும் அறிவியல் மன்றங்கள் அதிக அளவில் நடத்தாமல் விடுபட்டுள்ளன
* உடற்கல்வி அறை பொருட்கள் விடுமுறை நாட்களில் அந்நியர்களால் களவாடப்பட்டுள்ளன
* எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முறையான பிரிவு உபசார விழா நடத்தாமல் அனுப்பப்பட்டுள்ளனர்
* கழிவறை நீர் வெளியேற நடவடிக்கை இல்லாமல் விடுபட்டுள்ளது
* புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுத்தும் பலனில்லாமல் அவதிப்பட்டிருக்கிறோம்
* முதல் வகுப்பிற்கான டிஜிட்டல் தேர்வு நடத்தாமல் விடுபட்டுள்ளது
*வட்டார அளவில் கணினித் தேர்வில் பரிசு இழந்திருக்கிறோம்
* சதுரங்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் பெற இயலாமல் போனது
* DFC போட்டியில் பங்கேற்காமை
* தலைமையாசிரியரின் சத்துணவு மேற்ப்பார்வை குறைந்து போயிருந்தது
* ஆங்கில கையெழுத்துப் பயிற்சி-சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, கல்வியாண்டில் பாதியில் கிடப்பில் போடப்பட்டது
* Spoken English வகுப்பிற்கான முன் ஆயத்தப் பயிற்சியோடு நின்று போனது