குடியரசு தின விழா-2017


26.01.2017 அன்று காலை 8.30 மணியளவில் நமது தேசத்தின் 68வது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. லோகநாதன் மற்றும் தன்னார்வலர்கள் சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றுதல் நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவர்களின் தேசப்பற்று நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ராணுவ வீரர்கள் குறித்த நாடகம் காண்போரை எழுச்சியுறச் செய்தது. தன்னார்வலர் சந்திரமோகன் அவர்களின் குழு அனைத்து மாணவர்களுக்கும் பேனா பென்சில் அடங்கிய கிட் ஒன்று அளித்தனர்.

விழாச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு திரு. லோகநாதன் அவர்கள் மாணவர்களுக்கு விழா நிறைவில் இனிப்பு வழங்கினார்