நாணயக் கண்காட்சி-2015


கிராம கல்விக் குழு உறுப்பினர் திரு. கோல்டன் சரவணன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நாணயக் கண்காட்சியில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 5-8 வகுப்பு பயிலும் மாணவர்கள் திரளாக பங்கு கொண்டனர்.

ஆசிரியை திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் பொறுப்பேற்று அழைத்துச் சென்றார். உடன் உரிய வகுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நாணயக் கண்காட்சியில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், பல்வேறு நாடுகளின் நாணயங்கள், நாணயங்கள் தோன்றிய வரலாறு, தொல்பொருள் படிமங்கள், பழைய கிராமபோன் போன்ற மாதிரிகளைக் கண்டு பயனடைந்தனர்.