இன்னர்வீல் கிளப் -போட்டிகள்


இன்னர்வீல் கிளப் சார்பாக 15.10.2016 அன்று இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இன்னர்வீல் கிளப் சார்பாக பள்ளியில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களைப் பார்வையிடவும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிடவும் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட இன்னர்வீல் கிளப் தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் திருச்செங்கோடு சரக இன்னர்வீல் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இன்னர்வீல் சார்பாக பெண்குழந்தைகளுக்கான எரியூட்டி இயந்திரம், விளையாட்டுப் பொருட்கள் வழங்குதல், உடற்கல்வி அறை திறப்பு மற்றும் திடல் சமன்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளன.