உடற்கல்வி அறை-திறப்பு விழா


எதற்கும் பயன்படாமல் இருந்த சமையற்கூடத்தை இன்னர்வீல் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் புதுப்பித்து உடற்கல்வி அறையாக மாற்றியுள்ளோம்.

இதற்காக புதிய கதவு, மேற்கூரை பழுதுபார்ப்பு, வர்ணம் பூசுதல் ஆகிய பணிகளை உடற்கல்வி ஆசிரியர் திரு. ரமேஷ் மேற்கொண்டார்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு(11.10.2016) அன்று இன்னர்வீல் சங்கப் பொறுப்பாளர்கள் உடற்கல்வி அறையைத் திறந்து வைத்தனர். மேலும் ரூ2000 மதிப்புள்ள விளையாட்டுப் பொருட்களையும் நன்கொடையாக வழங்கினர்.

இன்னர்வீல் சங்கம் இதற்காக ரூ5000 வழங்கியிருந்தனர். மீதத் தொகையை ஆசிரியர்கள் திரு. ராஜா, பார்த்திபன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. ரமேஷ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.