ஆண்டு விழா - விளையாட்டுப் போட்டிகள்


வருடந்தோறும் ஆண்டுவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கென விளையாட்டுப் போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்று 27.02.2017 அன்று எலுமிச்சம்பழம் கொண்டு செல்லும் போட்டி நடத்தப்பட்டது. முதல் பரிசை உடற்கல்வி ஆசிரியர் திரு. ரமேஷ் அவர்களும், இரண்டாம் பரிசை திருமதி. ச. கோமதி அவர்கள் தட்டிச் சென்றனர். ஆசிரியர்களுக்கான பரிசை குழந்தை நேயப் பள்ளி ஆசிரியர் திரு. சிற்றரசு அவர்கள் ஆண்டுவிழா மேடையில் வழங்குகிறார்.