சாலைப் பாதுகாப்பு வாரம்


ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.

இன்னர்வீல் சங்கத்துடன் இணைந்து இப்பேரணியை நடத்தியிருந்தோம். சாலைப் பாதுகாப்பு விதிகள் அடங்கிய பதாகைகளுடன் மானவர்கள் முழக்கமிட்டவாறு பேரணியில் கலந்து கொண்டனர். மாணவர்களும் சாலை பாதுகாப்பு விதிகளை அறிந்து கொண்டது மட்டுமல்லாமல் விழிப்புணர்வுப் பேரணியிலும் கலந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது.