நம் பள்ளியைக் குழந்தை நேயப் பள்ளியாக முன்னெடுக்கும் பொருட்டு ஆசிரியர் திரு. சிற்றரசு அவர்களின் முயற்சியால் பல புதிய உத்திகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக குழந்தைகள் விரும்பும் கருத்தாழமிக்க பாடல்களை இசையுடன் பயிற்சியளித்துள்ளார். பயிற்சி பெற்ற குழந்தைகள் சேர்ந்து ஓர் இசைக்குழுவாக இணைந்துள்ளனர். இந்த இசைக்குழு நாள்தோறும் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் வகையிலான பாடல்களை இசையுடன் பாடி மகிழ்வித்து வருகின்றனர்.
