இன்று(10.02.2017) மதியம் 3 மணியளவில் தொடக்கக் கல்வி இணை இயக்குநர் அவர்கள் திடீரென பள்ளியை ஆய்வு செய்தார். ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
நான்காம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் Phonetics ஒலிக்குறியீடுகள் பற்றியும் குளம் குட்டை வேறுபாடு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். ஏழாம் வகுப்பில் தமிழில் மனப்பாடச் செய்யுள்களை ஒப்புவிக்கச் சொல்லி கேட்டார். ஆசிரியர்கள் அனைவரும் இளைஞர் பட்டாளமாக இருப்பதாகக் கூறி மேலும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
