இன்று(06.02.2017) 1 முதல் 8 வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு அரசின் உத்தரவுப் படி ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில் ஏறத்தாழ 300 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். அவர்கள் ஓய்வெடுக்க தனி அறையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மருத்துவர் கண்காணிப்பில் 3 மணி நேரம் வைத்திருக்கப்பட்டு வகுப்பறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
