நன்றி தெரிவிக்கும் கூட்டம்


இவ்வாண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்குச் செல்வதால், அவர்கள் வசம் இருந்த பள்ளி மாணவர் தலைவர், சுற்றுச்சூழல் தலைவர், மரக்கன்றுகள் பொறுப்பு போன்ற பல்வேறு பணிகள் அடுத்து வரும் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் சிறப்பாகப் பணியாற்றிய மாணவர்களுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. சமூகத்தில் பணிகளை ஏற்று எவ்வாறு திறம்பட செயலாற்றுவது, ஒப்பளிக்கப்பட்ட பணியை சீரிய முறையில் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர் திரு. பார்த்திபன் அவர்கள் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.