திருச்செங்கோடு, நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2017) காலை 8.30 மணியளவில் சுதந்திர தின விழா கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் திருச்செங்கோடு உதவிதொடக்கக் கல்வி அலுவலர் திரு.மாதவன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டுப் பற்றினை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டில் முதலிரு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக நன்கொடை பெறும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
விழாவில் கிறிஸ்டி நிறுவனம் சார்பாக ட்ரம்ஸ் செட், விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள், இமைகள் ட்ரஸ்ட் சார்பாக விளையாட்டு உபகரணங்கள், எவரெஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத் திறனாளிக்கான மிதிவண்டி மற்றும் புரவலர் மூலம் நூலகப் புத்தகங்கள் ஆகியன நன்கொடையாக வழங்கப்பட்டன.
கிராமியக் கலை, நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் தப்பாட்டம், ஜாலியன் வாலாபாக் சித்தரிப்புக் காட்சி, பிரமிடு அமைப்பு போன்ற பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் திரு. ராஜா நன்றியுரை கூறினார். நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது.