குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி-03.11.2017

இன்று (03.11.2017) இப்பள்ளி வளாகத்தில் குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஏறத்தாழ 13 பள்ளிகள் கலந்து கொண்டன.



இக்கண்காட்சியில் நம்பள்ளி தொடக்க நிலையில் சிறந்த பள்ளிக்கான பரிசினைப் பெற்றுள்ளது. உயர் தொடக்க நிலையில் ப. சுதன் என்கிற மாணவன் முதல் பரிசுத் தொகையாக ரூ600 ஐ காசோலையாகவும் பெற்றுள்ளார்.

பரிசு பெற்ற மாணவருக்கும், ஒத்துழைப்பு நல்கிய அறிவியல் ஆசிரியர் திரு. மனோஜ்குமார் அவர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்!