இன்று(14.11.2017) குழந்தைகள் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் இந்நாள் நம்பள்ளியின் விளையாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. A.J. குமரன் நினைவாக அவரது தாயார் திருமதி. உஷாதேவி அவர்கள் ரூ 20,000 வைப்புத் தொகையாக செலுத்தியுள்ள தொகைக்கு கிடைத்த வட்டித் தொகை ரூ 1439 இல் இவ்விழா கொண்டாடப்பட்டது.
காலை முதலே அனைத்து வகுப்புகளுக்குமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மிட்டாய் சாப்பிடுதல், பலூன் உடைத்தல் போன்ற போட்டிகளை மாணவர்கள் வெகுவாக ரசித்தனர். A.J. குமரன் அவர்களின் மாமாவும், இந்திய கபாடிக் குழு வீரருமான திரு. முரளி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
மாணவர்கள் அனைவரும் வண்ண ஆடையில் கலந்து கொண்டனர். விழா நிறைவில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.