திருச்செங்கோடு ஒன்றியம், நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி, 2017ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(18.12.2017) காலை 11மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விழாவில், சிறந்த பள்ளிக்கான சான்றும், ரூ 50,000க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் அவர்கள் வழங்க, தலைமையாசிரியர் திரு. ராஜா பெற்றுக் கொண்டார்.
ஆசிரியர்கள் திரு. பார்த்திபன், திரு. மனோஜ்குமார், திருமதி. உமாமகேஸ்வரி மற்றும் திருமதி. ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. லோகநாதன், கிராம கல்விக்குழு தலைவர் திருமதி. விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திருமதி. கமலம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் திரு. பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.